திருத்துறைப்பூண்டியில்  மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையர் ஆணையின்படி மாவட்ட ஆட்சியர் திரு ஆனந்த் உத்தரவின்படி 
திருத்துறைப்பூண்டியில்  மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.



மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜமூர்த்தி,  மாவட்ட மாற்றுத்தினாளிகள் துணை இயக்குனர் நல அலுவலர், மாவட்ட மனநல மரு|த்துவர் டாக்டர் சக்தி பிரகாஷ் , வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி, நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தரராஜன் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் தன்னார்வலர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்  அன்பழகன் மற்றும் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி பகுதிகளில்
மனநலம் பாதிக்கப்பட்டு உறவினர்களால் கைவிடப்பட்ட வர்களை கண்டறிந்து மீட்டெடுத்து ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு அழைத்துவந்து முடி சீர்திருத்தி நீராடி புத்தாடை அணிவித்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளாக தொடர் மருத்துவம் அளித்து பராமரிக்கும் வகையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சில பேர் தமிழ் பேச தெரியாது எவருக்குமே முகவரி சொல்ல தெரியவில்லை நாளடைவில் முகவரி தெரியவந்ததும் எந்த ஊர் ஆயினும் அவர்களது உறவினர்களை கண்டறிந்து ஒப்படைக்கப்படுவார்கள் மனநல காப்பக இயக்குனர் செளந்தரராஜன் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்  அன்பழகன் அனைத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரித்து பேசி கலந்துரையாடினார் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,