வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12
Hungry Street children eating donated food in this Covid 19 spread days.
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும்.
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்பட்டது.
இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்பட்டது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடினர். இந்த ஆண்டு அந்த நாளைக் கொண்டாடும் நிலையில் சிறுவர்களும் இல்லை, பெரியோரும் இல்லை. ஏன் யாருமேயில்லை. உலகமே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது, கொடிய தொற்றிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற வழி தெரியாமல்.
வீதியோரச் சிறுவர்களைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? அச்சிறுவர்கள் ஏன் வீதிக்கு வந்தார்கள்? அவர்களுடைய பெற்றோர்கள் யார்? அவர்கள் எப்படி வாழ்கிறர்கள் என்று யாராவது யோசித்தார்களா? குறிப்பாக, நாய், பூனை போன்ற செல்ல வீட்டுப் பிராணிகளை தங்கள் குழந்தைகளாகக் கருதி வளர்ப்போர், இந்த வீதியோரச் சிறார்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பார்களேயானால், அச்சிறார்களில் எவ்வளவு அறிவுஜீவிகள், மேதைகள் ஒளிந்திருப்பார்கள் என்பதை அறிந்து, கை தூக்கிவிடலாம். இதைப் படிக்கும் அனைவரும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி, இந்த ஊரடங்கு காலத்தில் வீடில்லா அச்சிறார்கள் எங்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலும் என்பதை உரியவர்களுக்குத் தெரிவிக்க முயலலாம். உயிருள்ள அவர்களுக்கு உணவு தேவை என்பதை உணர்ந்து, ஆளுக்கொரு வேளை ஒருவருக்கு என உணவு கொடுத்தால்கூட அது பலனளிக்கும்.
செ ஏ துரைபாண்டியன்
Comments