யதார்த்தத்தின் மற்றொரு பெயர்  ஜெயகாந்தன்

யதார்த்தத்தின் மற்றொரு பெயர்  ஜெயகாந்தன்


இன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் தினம் 8.4.2020


 


        ஜெயகாந்தன் பற்றி   ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" – என்கிறார் அசோகமித்திரன்


         ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்


. இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள்புதினங்கள்,


 கட்டுரைகள்,  திரைப்படங்கள்  என பரந்து இருக்கின்றது


                 ஜெயகாந்தன் 1934-ஆம்  ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் . பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.


             ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார் 


          ரயிலில் டிக்கெட்இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்


. அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதிதாமரைகிராம ஊழியன்ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.


   • மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் ‘தத்ரூபம்’ என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப்புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். " - வண்ணநிலவன்  அவரைப்பற்றி சொல்வது உண்மைதானே


கதைகள் நாவல்கன் என ஏராளத்திற்கு மத்தியில் 


     பாரதி பாடம் . இமயத்துக்கு அப்பால் . ஜெயகாந்தன் பேட்டிகள்  என கட்டுரைகள்


பல சிறுகதைகள். நாவல்கள் என வளர்ந்தார்


திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்  


சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)இவ்ர  இயக்கிய திரைப்படங்கள்இவருடைய சில சிந்தனைகள்  • "முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே"

  • "ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினைப் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்"

  • "மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே"

  • "அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டா. ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்"

  • "நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... "


இவருக்கு  ரஷ்ய விருதுஎன பல விருதுகள் கிடைத்துள்ளன  • " ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம். " – என்கிறார் மாலன்


அவரைப்பற்றி  எழுத்தாளர் ஜெயமோகன் தனது முன்னோடிகள் விமர்சன வரிசையில், மண்ணும் மரபும் எனும் நூலில் ஜெயகாந்தனின் படைப்புலகை குறித்து விவாதித்துள்ளார். மேலும் சில கட்டுரைகளை அவரது தளத்தில் எழுதியுள்ளார்


. விமர்சகர் எம். வேதசகாயகுமார் தனது முனைவர் பட்ட ஆய்வை புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு எனும் நூலாக்கியுள்ளார்.


 2009ல் முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஜெயகாந்தனின் குறுநாவல்களில் ஆய்வு செய்துள்ளார். ஜெயகாந்தன் இலக்கியத்தடம்ஜெயகாந்தன் ஒரு பார்வை ஆகிய நூல்களை முறையே ப.கிருஷ்ணசாமி, கே.எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் எழுதியுள்ளனர்.


ரவிசுப்பிரமணியன் எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன் என்ற பேரில் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார்.


 


            ஜெயகாந்தனின் மறைவிற்கு பிறகு அவர் பற்றி எழுத்தாளர்கள் ஆற்றிய உரைகளும் தொகுக்கப்பட்ட நூல்களும் முக்கியமானவை.


 


 செ ஏ துரைபபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை