பிரபு தேவா   இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர்

                        பிரபு தேவா  ஏப்ரல் 31973,  இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.  மின்சார கனவு  திரைப்படத்தில் இடம்பெற்ற  வெண்ணிலவே வெண்ணிலவே  பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா  சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப்  பெற்றுள்ளார்.


நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை  ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த  முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர்  போக்கிரி,  வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.


தேசியவிருது


மின்சாரக் கனவு  திரைப்படத்தில் இடம்பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான  இந்திய   திரைப்பட   விருதை  பெற்றார்.


 


பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த  இதயம்  திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே  பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ் பெற்றாலும் அதன் பின்னர் ஜெண்டில்மேன்  திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே  பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது.   


இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம்  திரைப்படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா  பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரது தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்து ஷங்கரின் இயக்கத்தில்  ருவான  காதலன்  திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழி பெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பல படங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத் திறமை  ஏழையின் சிரிப்பிலே  திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பேருந்து கூலி வேலையாளாக நடித்தார்.  மும்பை: டான்ஸ் உலகின்  சச்சின் டெண்டுல்கர்  பிரபுதேவா என்று ஏபிசிடி 2 இந்தி படத்தின் ஹீரோ  வருண் தவான்  தெரிவித்துள்ளார். ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா,  சல்மான் யூசுப் கான்  உள்ளிட்டோர் நடித்த ஏபிசிடி படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏபிசிடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து ரெமோ ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.


 


தகவல்   செ ஏ துரைபாண்டியன் 


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,