குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக அரசு பணியாளர்களுக்கும் நகராட்சிக்கு மற்றும் மருத்துவ துறைக்கு உதவிடும் வகையில் பணி
குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு பணியாளர்களுக்கும் நகராட்சிக்கு மற்றும் மருத்துவ துறைக்கு உதவிடும் வகையில் 24 வார்டுகளிலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை அடையாளம் காணவும் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களை அடையாளம் காணவும் மற்றும் காய்ச்சல் சளி என இருக்கிறதா என்று அனைத்து வீடுகளிலும் கணக்கெடுக்கும் பணிகளில் தற்போது தன்னார்வலர்கள் ஆக பதிவு செய்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர் இவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது . சுமார் 32 பேர் அடையாள அட்டை பெற்று தங்களுடைய பணிகளை செய்து வருகின்றனர். மேலும் காவல் துறையினருக்கும்
போக்குவரத்து காவல்துறைக்கும் உதவிடும் வகையில் காவல்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி ரேஷன் கடை மளிகை கடை காய்கறி கடைகள் போன்ற இடங்களில் பொதுமக்களை இடைவெளிவிட்டு அறிவுறுத்தவும்
கூட்டம் கூடும் போது அதை தடுக்கவும் தேவை இல்லாத வாகனங்கள் நபர்கள் நகரத்துக்குள் வருவதை கட்டுப்படுத்தவும் தேவையில்லாமல் ஊர் சுற்றும் நபர்கள் வெளியே வரும்போது எச்சரிக்கை செய்யவும்… விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொதுமக்களுக்கு கை கழுவுதல் எவ்வாறு பாதுகாப்பது இருப்பது என்று கொரோனா வைரஸ் சம்பந்தமாக நோட்டீஸ் வினியோகம் பணிகளையும் குளித்தலை நகரத்தில் உள்ள 24 வார்டுகளிலும் செய்து வருகின்றனர்..
செய்தியாளர் முகிலன் கரூர்
Comments