இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் கோரிக்கை
உயர்த்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்
அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகம்,
வணக்கம்,
திரு. செய்தி ஆசிரியர் அவர்களுக்கு, இந்த செய்தியை தங்கள் ஊடகம் மற்றும் பத்திரிகையில் செய்தியாக வெளியீடு செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
16.04.2020 ஆவடி மற்றும் வீராபுரம் பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு பூமிகா நிறுவனத்தின் உதவியுடன், இனியஉதயம் தொண்டுநிறுவனம் தமிழக அரசு வழிக்கட்டுதலின் படி ஆவடி தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் வீராபுரம் தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் முன்னிலையில் ரூபாய் 1500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 10 நாட்களுக்கு தேவையான வழங்கப்பட்டது.அனைவருக்கு முககவசம் கொடுத்து தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் திருமதி,கோமளா அவர்கள் 144 சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதலிருந்து இன்று வரை மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகிறார். பொது மக்களுக்கு தேவையான தேவைகள் பூர்த்தி செய்துவருகிறார். இந்த நிகழ்வின்போது இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் செயல் திட்ட மேலாளர் திரு.ஹரிஷ்குமார், ஆசிரியர் சாமுண்டீஸ்வரி மற்றும் அப்பகுதியில் தன்னார்வலர்கள் மகாலட்சுமி,வெங்கடேசன்,பாலமுருகன்,இளமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்னும் நிறைய மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.நீங்கள் நினைத்தால் மக்களின் பசியை போக்கி அவர்களிடத்தில் மகிழ்ச்சியை காணலாம் என்று கூறி சமூகத்தை அழைத்தார் திருமதி கோமளா அவர்கள்.
விழித்திரு! விலகி இரு!! வீட்டில் இரு!!!
Comments