மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன்  பிரதமர் நரேந்திர மோடிகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள்  குறித்து ஆலோசனை

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன் 
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசினார்


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள்
 குறித்து ஆலோசனை கேட்டார்


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவரது உடல் நலன் குறித்தும், மருத்துவர் அய்யா அவர்களின் உடல் நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார். மருத்துவர் அய்யா அவர்களின் உடல்நலனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படியும் பிரதமர் அவர்கள் அறிவுறுத்தினார்.


தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய நரேந்திர மோடி அவர்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இந்தியா வலிமையான தலைமையின் கீழ் செயல்பட்டு வருவதை பிரதமரின் நடவடிக்கைகள் உணர்த்துவதாகவும் பாராட்டினார்.


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் உறுதியளித்தார். அதைக்கேட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஒரு மருத்துவர் என்ற முறையில் அரசின் நடவடிக்கைகளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றாக  புரிந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமருக்கு அனுப்புவதாகவும் உறுதியளித்தார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்