திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் கொரனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் கொரனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மருத்துவமனை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சானிடைசர் மாஸ்க் ,கையுறை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் தலைமையில் தொகுதிக்குட்பட்ட விளக்குடி , பொன்னிரை,  கொற்கை ஆகிய பகுதிகளில் கொரனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் , மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியில் ஈடுபடுபவர்களுக்கு முககவசம், கையுறை, சனிடைசர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி ,காய்கறிகளை வழங்கினார்.


 இந்த நிகழ்ச்சிகளில் திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை