தமிழ்ப்புத்தாண்டு வெண்பா

தமிழ்ப்புத்தாண்டு    (சார்வரி ஆண்டு)   
        **
    ஒருவிகற்ப        இன்னிசை       பஃறொடை         வெண்பா
                                                         ***********************
சார்வரி
   ஆண்டில்
      சகல
       நலமொடு


பார்உறை
   மக்கள் 
     படர்ச்சி
       (ஒழுக்கம்)
    நிலைக்கட்டும்


ஏர்வழி
    செல்லும்
     இதயம்
      அமைந்திட


ஊர்நிறை
   ஊட்டம்
      (செழிப்பு)
        உவகை
       அளிக்கட்டும்


  ஆர்மலி
  (அழகுமிகு)
    ஆக்கம்
      அகத்தில்
        அணுகிட


 தீர்வுகள்
    எல்லாம்
      தினமும்
     பெருகட்டும்.


 சீர்மிகு
   செந்தில்
      சிரிக்கும்
        குமரனே


 தூர்உடன்
    தொற்றைத்
      (குரோனா)
       துரத்து.
        **
நல்லவை
நன்றாய்
நலமே
நவில்க.


-அன்புடன்
ச.பொன்மணி


ஒலி வடிவில் கேட்கComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்