சித்திரை மகளே வருக
கவிதை பக்கம்
சித்திரை மகளே வருக
மகிழ்ச்சி வெள்ளம் பெருக
உன் வருகையில் உள்ளம் உருக
உந்தன் சுபீட்சமெனும் தேனைப் பருக
உன்னை வேண்டாதோர் மனம் குறுக
உன்னால் நம் துன்பமெல்லாம் சிறுக
தீயவைகளின் கொள்கையைத் திருக
அனைத்து இன்பங்களும் தருக.........
.. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
--மஞ்சுளாயுகேஷ்
Comments