திருத்துறைப்பூண்டியில் கொரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று வர்த்தகர் சங்கம் அறிவிப்பு.

திருத்துறைப்பூண்டியில் கொரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று வர்த்தகர் சங்கம் அறிவிப்பு.
திருத்துறைப்பூண்டியில் தமிழக அரசின் உத்தரவுப்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்துவரும் மளிகை கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மூன்று கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம்  அருகில் இயங்கிவரும் இரண்டு மளிகை கடைகள், ஒரு மிட்டாய் கடைகளில் நகராட்சி, வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறையினர் சமூக இடைவெளியை கடைபிடித்துவியாபாரம் செய்ய அறிவுறுத்தியும் கூட்டம் கூட்டமாக நின்றதாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதததால் மூன்று கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் மறு உத்தரவு வரும்வரை திறக்க கூடாது என்று சீல் வைத்து சென்றனர்.
திருத்துறைப்பூண்டியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 முதல் மதியம் 1 மணி வரை அரசு உத்தரவுப்படி இயங்கிவருகிறது நகர பகுதிகளில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க வருபவர்களை விட கிராமப்பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருகின்றனர் ஆனால் கடைக்குள் ஒருவர் பின் ஒருவராக சென்றுவந்தாலும் கடை முன்பு வந்தவர்கள் கூட்டமாக நிற்கின்றனர் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த நகராட்சி அலுவலர்கள், போலீசார் உள்ளிட்டவர்கள் முன் வராததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மளிகை கடை உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வர்த்தகசங்க தலைவர் செந்தில்குமார் தெரிவித்தது:
கொரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி நகரில் அத்தியாவசிய பொருட்களான மருந்து மளிகை பொருட்கள் உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இயங்கிவருகிறது. சமூக இடைவெளியை கடைகளில் பின்பற்ற நகராட்சி, வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தவும் கடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வராததால் 12-ந்தேதி முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் அதிகாரிகள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி முழு ஒத்துழைப்பு வழங்கினால்
மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறக்கப்படும் என்றார்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,