*நியாய விலைக்கடைகளில் குறைந்த விலையில் மளிகைப் பொருட்களின் விபரம்!

*நியாய விலைக்கடைகளில் குறைந்த விலையில் மளிகைப் பொருட்களின் விபரம்!*


_தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில், 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு பை ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது._


கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகத்தில் கோடிக்கணக்கான பேர் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர். 


இந்நிலையில் வெளிச்சந்தையை விட குறைவான விலையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு பை திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.
 
மளிகைக்கடைகளில் வாங்குவதை விட குறைந்த விலையில் அதிக பொருட்களை உள்ளடக்கிய வகையில் விற்பனை செய்யப்படும் இந்த தொகுப்பு பையின் விலை ரூ.500. 


மேலும், அந்தப் பையில் *உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு தலா அரை கிலோ;*


*கடலைப்பருப்பு, தோசை புளி, பொட்டுக்கடலை, பூண்டு தலா கால் கிலோ;*


*மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள், டீ தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம்;*


*நீட்டு மிளகாய் 150 கிராம், தனியாத்தூள் 200 கிராம்;*


*உப்பு 1 கிலோ, கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட் 200 மில்லி, பட்டை - 10 கிராம், சோம்பு - 50 கிராம்* ஆகிய 19 பொருட்கள், மேற்கண்ட அளவுகளில், ரூபாய்.500க்கு அளிக்கப்படுகின்றன.


மேற்கண்ட இந்த 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் இனி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் கோடிக்கணக்கான பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்