நமது ரசனைகக்கான  தமிழ்த்திரைப்பாடல்கள் தொடர்

நமது ரசனைகக்கான  தமிழ்த்திரைப்பாடல்கள்


தொடர்


 பகுதி    1


ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச் செங்கமலம்               இந்த பாடலை அதிகம் யாரும் கேட்க முடியாத பாடல். இந்த பாடலின் முக்கியமான விஷேசம் என்னவென்றால் ஜானகியம்மா ஒரு வார்த்தை கூட வரியாய் பாடாமல் ஹம்மிங்கிலேயே பாடல் முழுவரிகளையும் ஒவ்வொரு எழுத்தாய் குரலிலே பாடி நம்மை அசத்தியிருப்பார்கள்


 
. பாடல் பலமுறை கேட்டாலும் ஒருமுறை கூட சலிக்காது
நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு காலகட்டங்களின் வளர்ச்சியை பாலு அவர்கள் பல வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக படங்களில் பாடியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களிலும் தானே நடிப்பது போல் தன் குரலில் அதிகபட்ச உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பா


.
                அந்த வகையில் ஒரு அழகான கதாபாத்திரத்தை தன் நினைவில் கொண்டு வந்து "ஆராதனை" என்ற படத்தில் பாடியிருப்பார். அந்த பாடல் "ஒரு குங்குமச்செங்கமலம்" என்ற பாடல். இந்தவரிகளில் உணர்வீர்கள்
// முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப்பார்த்தால் முழு வெள்ளை
ம்ஹாஆஆஆஆ
மடியில் தவழும் மகன் பிள்ளை
ம்ஹாஆஆஆஆ
நீயேந்திக்கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
ஹஹஹ
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்
லலலா
நீ சாய்ந்திருக்க
லலலாஆ
பசியடங்கி நான்

               இதன் இசையும், பாடிய பாடகர்களும், பாடலை எழுதிய கவிஞரும் மன நிம்மதியாக இருக்கும்போது படைத்த பாடலாகத்தான் இருக்கவேண்டும் இதற்காக ராஜா, எஸ். பி. பாலசுப்ரமண்யம், ஜானகி, வைரமுத்து இந்த நால்வரையும் எவ்வளவு ஆராதனை செஞ்சாலும் போதாதுங்க.


      இந்தப் பாடலை நான் கேட்டபோது இது ஒரு காதல் ஜோடிப் பாடலாகத்தான் நினைத்திருந்தேன். நேற்று இரவு இந்த பாடல் கேட்டபோது பாடும ஜானகி அம்மா குரலுக்கு பாடலில் வரிகளே கிடையாது. ஆனால் பாடல் முழுவதும் பாலுதான், அவரது குரலை அரவணைத்து செல்லும்.


              கவிஞரும் இந்தப் பாடலில் வரும் முதல் சரணத்தில், காதலி திருமணமாகி தன் குழந்தையைச் சுமக்கும் காலத்தையும், பின்னர் இரண்டாம் சரணத்தில் தங்களது முதிய வயது வாழ்க்கையையும் எப்படியிருக்கும் என்று காதலன் எண்ணிப் பார்ப்பது போல அமைத்திருப்பார்.           நிறைய ராஜா சார் பாடலை நாம் கேட்கும்போது அந்த பாடலுக்கான கற்பனை நம் மனதில் ஒடும் படம் பார்க்கமல் இருந்திருந்தால்
ஆனால் இது போல பாடல்களை படத்தில் பார்க்கும்போது சம்பந்தமில்லா காட்சிகளும் ஒளிப்பதிவும் நம்மை அழவைக்கும
இந்த பாடலும் அப்படியே
கேட்க மட்டும்தான்
                   எவ்வளவு சொதப்பலாக பாடலை எடுக்கமுடியுமோ, அவ்வளவு சொதப்பலாக படமாக்கியிருக்கிறார்கள்
இதன் காணொளியைப் பார்த்து திடுக்கிட்டேன்
இனி உங்கள் இஷ்டம்

படம்: ஆராதனை
இசை: இளையராஜா
குரல்: SPB ஜானகி
பாடல்: வைரமுத்து

ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச் செங்கமலம்

திருவாய் மலர்வாய் கருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
காயைப் புசிக்கும் கனியாவாய்
பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக் கொய்ய வேண்டும்
மின்னலிலே ஒரு கயிறு எடு
மேகங்களால் ஒரு தூளியிடு
கதிரோ தளிரோ இள மகளது திருமுகம்

முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப் பார்த்தால் முழு வெள்ளை
மடியில் தவழும் மகன் பிள்ளை
நீயேந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில் நீ சாய்ந்திருக்க
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச் செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச் செங்கமலம் 


 


#உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை