அன்னாசிப் பழ ஐஸ் கிரீம்

அன்னாசிப் பழ ஐஸ் கிரீம்


அன்னாசிப் பழம் (தோல் சீவி கூழாக்கியது) - 1 கப்


கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்


முந்திரி, பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்


அன்னாசிப் பழ கலர் எசென்ஸ் - ஒரு துளி


ஃப்ரெஷ் விப்பிங் கிரீம் - 1 கப்


எப்படிச் செய்வது?


பெரிய பாத்திரத்தில் விப்பிங் கிரீமைப் போட்டு பிளெண்டரால் நன்றாக விப் செய்யுங்கள். 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக இப்படிச் செய்தால்தான் கிரீம் இரண்டு மடங்காகும். பஞ்சு போன்ற பதம் வந்ததும் அதை ஃப்ரீஸரில் வைத்து எடுங்கள். பிறகு அதனுடன் அன்னாசிப்பழக் கூழ் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளங்கள். அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து அடித்து எசென்ஸ்ஸைச் சேருங்கள். பிறகு முந்திரி, பாதாம் பருப்புகளைத் தூவி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ஃபிரீஸரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான அன்னாசிப்பழ ஐஸ்கிரீம் ரெடி.


 


இதேபோல் வாழைப்பழம், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி போன்றவற்றிலும் செய்யலாம்.


 செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,