புத்தகங்களை நேசியுங்கள்
"நான் இன்னும் வாசிக்காத ஒரு நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைச்சிறந்த நண்பன்"
- ஆப்ரகாம் லிங்கன்
புத்தகங்கள் நம்மை அதிகமாக தனிமைப்படுத்தும். ஒருபோதும் தனிமையை உணரச் செய்யாது. ஆனால் தேவைப்படும் சூழ்நிலைகளில் நம்முடன் இருந்து நம்மை ஆசிர்வதிக்கும்.ஆதரிக்கும் அரவணைக்கும் முடியும் என்றால் பிரச்சினைகளில் இருந்து நம்மை வெளிக்கொண்டு வரும்.யாருமில்லையென்ற எண்ணத்தை நம்முள் எந்தச் சமயத்திலும் வளர விடாது.
ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தை தந்து நகரும் என்று சொல்ல முடியாது.நம் மனசு எதை அதிகம் விரும்புகிறதோ அந்த மாதிரியான புத்தகத்தை நாம் படிக்கும் போது நம் எண்ணம் தான் அந்த அனுபவமாக செயல்படும்.இருப்பினும் புத்தக வாசிப்பு என்பது பல விதமான அனுபவங்களைக் கொடுக்க கூடியது.
ஒரு நல்ல புத்தகம் என்ன செய்யும் என்பதை விட ஒரு நல்ல புத்தக வாசிப்பு வாசிப்பவரின் மனநிலைக்கு என்னவெல்லாம் கொடுக்கும் என்பது தான் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களின் மன ஆறுதல்.
திடீரென்று புத்தகம் படிப்பது சிரமமான ஒன்று தான்.ஆரம்பத்தில் பழக்கப்படாத ஒன்றை பழக்கப்படுத்தும் போது கடினமான செயலாக இருக்க கூடும்.ஏன் தூக்கம் கூட வரலாம்.
இதையெல்லாம் தவிர்க்க ஆரம்பத்தில் குறைந்தது தினமும் இரண்டு பக்கங்கள் படிக்கலாம்.குறைவான தாள் எண்ணிக்கை கொண்ட சிறிய புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம்.அவரவரின் விருப்பம் எதில் உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக காதலில் அதிக ஈடுபாடு இருந்தால் காதல் கதைப் புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம்.இல்லை உங்களுக்கு விளையாட்டில் ஈடுபாடு உள்ளது அதில் தேர்ந்தெடுக்கலாம்.கண்டிப்பாக நாள்தோறும் இரண்டு பக்கங்களாது படிக்க வேண்டும்.
இதை தான் பகுத்தறிவு மேதை "இங்கர்சால்" கூறுகிறார்
"போதும் என்று நொந்து புது வாழ்க்கையைத் தேடுகிறீர்களா ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு" என்கிறார்.
புத்தக வாசிப்பில் இருந்து தான் எந்தவொரு கலையும் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது.வாழ்க்கையில் தேடல்கள் தொடங்கிறது புத்தகங்கள் நம்மை வழிநடத்தும் அனைத்து பாதையிலும் ஆகவே புத்தகங்களை நேசியுங்கள் வாசியுங்கள்...
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments