குடும்ப பொறுப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்

குடும்ப பொறுப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்



          சரி நம்மை படைத்து-காத்து -அருளும் பரமனின் குடும்ப பொறுப்பு எப்படி இருக்கும் என்பதை சிந்தையில் கொண்டு வந்து கற்பனை செய்து அதை இங்கு பதிவிடுகிறேன் -


        --கயிலாயமலை --சிவபெருமான் இல்லம் ---தியானம் கலைந்து கண் விழித்தார் சிவபெருமான் ----அப்பா என்று அன்பாக அழைத்து கொண்டே ஓடி வந்து அவர் மடியில் அமர்ந்தான் அவர் மகன் கணபதி ---கணபதியை தன் வலது மடியில் அமர்த்திய சிவபெருமான் -- என் செல்ல மகனே கணபதி என்று கொஞ்சி முத்தமிட்டார் சிவனார்


   --அப்போது கணபதி சிவனாரிடம் --அப்பா என் இரு- தந்தத்தில் ஒரு தந்தத்தை பாரதம் எழுதும் போது ஒடித்தேன் அல்லவா ---இப்போது நீங்கள் சூடிய பிறை நிலவை பார்க்கும் போது என் தந்தம் போலவே காட்சியளிக்கிறது அப்பா --என்று மழலை   மொழியில் கூற --அதை கேட்டு சிவனார் கல கல வென சிரித்தார் -


           --அப்போது --அவரது இரண்டாவது மகன் முருகன் ஓடி வந்து ---சிவனாரின் இடது மடியில் அமர்ந்து ---அப்பா --நீங்கள் இன்று உலகோருக்கு படியளக்க கிளம்பும் போது நானும் உங்களுடன் வரவா --உலகை சுற்றி பார்த்து பல நாள் ஆயிற்று என்று கேட்க --கணபதி குறுக்கிட்டு ---தம்பி தாய்-தந்தை தான் உலகம் என்பதை மறந்து ---உன் மயிலேறி உலகம் சுற்றி வந்தாய் அல்லவா --இப்போது என்னவாம் உன் மயிலேறி செல்லவேண்டியதுதானே ஏன் அப்பாவை தொந்தரவு செய்கிறாய் --அதை கேட்டு முருகன் அழுது கொண்டே அம்மா இங்கே வாயேன் என்று அழைத்தான்


                   ---அட ட ட டா காலையிலே உங்க ரெண்டு பேர் சண்டையை ஆரம்பிச்சுட்டீங்களா கணபதி நீ எப்போ பார்த்தாலும் ஏன் முருகனை சீண்டிகிட்டே இருக்க உனக்கு பிடித்த கொழுக்கட்டை பண்ணி வச்சுருக்கேன் சாப்பிட வா நீ ---அப்புறம் பார்வதி தேவி சிவனாரை பார்த்து ---என்னங்க உலகத்துயிர்களுக்கு படியளக்க போனோமா வந்தோமான்னு இருக்கனும் அதை விட்டுட்டு யாரவது அடியவர்கள் பாடிய தேவார-திருவாசகத்தை கேட்டுட்டு அங்கையே மெய்-மறந்து அமர்ந்திரக்கூடாது புரியுதா ---ம்ம் உங்கிட்ட சொன்னாலும் இப்போ சரினு தலையாட்டிட்டு அப்புறம் நீங்க செய்றதை-தான் செய்விங்க ---நந்தி மகனே என்று பார்வதி அழைக்க --சொல்லுங்கள் அம்மா --என்று நந்தி-தேவர் பார்வதி தேவி முன் வந்து நின்று வணங்கி நிற்க ---பார்வதி --தேவி--நந்தி மகனே ----இவர் பாட்டுக்கு அடியவர்கள் பாடுறத கேட்டுட்டு எங்கையாச்சு மெய்-மறந்து நின்றுவிட்டாள் அங்கையே விட்டு விடாதே படியளக்கும் வேலை முடிந்ததும் கயிலைக்கு கூட்டிட்டு வந்துடு சரியா ---நந்திதேவர் ---ஆகட்டும் தாயே என்றார்


            ---முருகன் --அம்மா எனக்கு ஒரு சந்தேகம் அதற்க்கு விளக்கம் கூற முடியுமா ---பார்வதி தேவி --உன் தந்தைக்கே உபதேசம் செய்தவன் நீ உனக்கு சந்தேகமா --சரி கேளப்பா ---அம்மா --நம் கயிலை மலையில் ---மதுரை மீனாட்சி ஆட்சியா ?அல்லது --சிதம்பரம் நடராஜர் ஆட்சியா ?என்று கேட்க --பார்வதி தேவி-முருகா உனக்கு வேறு சந்தேகம் உதிக்க கூடாதா ---சரி நம் கயிலை மலையில் ---சிதம்பரம் நடராஜர் ஆட்சிதானப்பா என்று பார்வதி தேவி கூற --சிவபெருமான் குறுக்கிட்டு முருகா இல்லையில்லை ---நம் கயிலைமலையில் --மதுரை மீனாட்சி ஆட்சிதானப்பா----என்று கூற --கணபதியும் --முருகனும் குழம்பி --அம்மா-அப்பா உண்மையில் யார் ஆட்சி என்று கூறுங்கள் எங்களை குழப்பாதீர்கள் ---


                     சிவபெருமான் குறுக்கிட்டு ---கணபதி --முருகா குழப்பம் வேண்டாம் விளக்கம் அளிக்கிறேன் கேளுங்கள் --ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை ஆளவேண்டும் ---மனைவி கணவனை ஆளவேண்டும் ---இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து வாழ்தலே சிறந்த வாழ்க்கை ---கணவன் மனைவியின் சொல்லுக்கு மதிப்பளிக்கவேண்டும் --மனைவி கணவனின் சொல்லுக்கு மதிப்பளிக்கவேண்டும் ---இவள் தனதானவள் தன் உயிர் என தன் மனைவியை --அவள் - கணவன் நினைக்கவேண்டும் ---அதே போல் --இவன் தனதானவன் தன் உயிர் என கணவனை அவள் மனைவி நினைக்கவேண்டும் ---மதுரையில் மீனாட்சி ஆளும் போது சொக்கன் விட்டு கொடுத்து வாழ்கிறார் ---சிதம்பரத்தில் நடராஜர் ஆளும் போது சிவகாம -சுந்தரி விட்டு கொடுத்து வாழ்கிறாள் ---கணவனை பொறுத்தவரை தன்னை விட உயர்வானவள் மனைவி என நினைக்கவேண்டும் --மனைவியை பொறுத்தவரை தன்னை விட உயர்வானவன் கணவன் என நினைக்க வேண்டும் ---இப்படி ஒருவருக்கொருவர் புரிந்து வாழும் இல்லறமே நல்லறமாகும் ---என்று கூறி முடிக்க ---முருகனும்- கணபதியும் சிவனாரையும் --பார்வதியையும் அன்போடு வணங்க ---இருவருக்கும் ஆசி கூறினார்கள்


               சிவனாரும் --பார்வதி தேவியும் ---நாமும் நம் இல்லறம் நல்லறமாக சிறக்க நம் தாய் தந்தை ---சிவ-பார்வதியின் ஆசி பெறுவோம் ---ஓம் நமசிவாய


 


---/\--- படித்ததை பகிர்ந்தேன்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி