அசோகன் என்கிற ஆன்டனி

 


இன்று  திரைப்பட நடிகர் அசோகன் அவர்களின்  பிறந்தநாள்



எஸ். ஏ. அசோகன் (S. A. Ashokan) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் பொதுவாக அசோகன் என்றறியப்படுகிறார்.20 .5.1931ல் பிறந்த இவர் தமிழ்த் திரைப்படவுலகில் சிறந்த வில்லன் நடிகராக அறியப்பட்ட இவர் ஒரு குணசித்திர நடிகருமாவார். நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார்.


திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆன்டனி ஆகும். தனது சிறுவயது முதலே, மேடைநாடகங்களில் பங்கேற்பதிலும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டிய இவர் திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.அந்தக் காலத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து திரையுலகுக்கு நடிக்க வந்தவர்களில் இவர் குறிப்பிடத் தகுந்தவர்.  மற்றொருவர் ஜெமினி கணேசன்.


பட்டப்படிப்பு முடித்த பின்னர் இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவைச் சந்தித்தார். அவர் அசோகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.


ராமண்ணாவின் விருப்பப்படி, ஆன்டனி என்ற தன் பெயரை அசோகன் என திரையுலகிற்காக மாற்றிக் கொண்டார்.


முதன்முதலில் ஔவையார் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.


1961 ஆம் ஆண்டில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் மூலம் ஆஷ் துரை வேடத்தில் நடித்து திரையுலகில் முன்னேறத் தொடங்கினார்.


 


1960 மற்றும் 1970 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்திருந்தாலும் பல குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.


திரைப்படங்களில் அவரது குரலின் தொனியும், வசனங்களை அவர் உச்சரித்த பாணியும் அவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தந்தன.


குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்


 




  1. வல்லவனுக்கு வல்லவன்



  2. உலகம் சுற்றும் வாலிபன்

  3. கந்தன் கருணை

  4. வீரத்திருமகன்

  5. ஆட்டுக்கார அலமேலு

  6. அடிமைப் பெண்

  7. அன்பே வா

  8. காஞ்சித் தலைவன்

  9. ராமன் தேடிய சீதை

  10. உயர்ந்த மனிதன்

  11. பாதகாணிக்கை

  12. நான்

  13. கர்ணன்


மறைவு


எஸ். ஏ. அசோகன் 1982 நவம்பர் 19 அன்று தனது 52ஆவது அகவையில் மாரடைப்பால் காலமானார்.


மூன்று ஆண்டுகளின் பின்னர் இவரது மனைவி மேரி ஞானம் (சரசுவதி) காலமானார். இவர்களின் இரண்டு மகன்களில் அமல்ராஜ் காலமாகிவிட்டார். மற்றையவர் வின்சென்ட் அசோகன் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார்.


அன்பேவா பாடத்தில்ஒரு உருக்கமான காட்சியில்



சினிமாவில்


பின்னர் சினிமாவில் நுழைந்த அவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். அவ்வையார், மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, எம்.ஜி.ஆர். படங்கள்


அசோகன் அதிகமாக நடித்தது எம்.ஜி.ஆர். படங்களில்தான். 88 எம்.ஜி.ஆர். படங்களில் அவர் நடித்துள்ளார். திரை உலகத்தினர் அனைவருடனும் இனிமையாக பழகக்கூடியவர். அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள்.


கதாநாயகன்


1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அசோகன் நடித்தார். சொந்தப்படம்


இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.


19-11-1982 அன்று  மாரடைப்பு ஏற்பட்டதில்   அன்று இரவு 9.35 மணி அளவில் அசோகன் உயிர் பிரிந்தது. கிறிஸ்தவரான அசோகன் இந்து மதத்தைச் சேர்ந்த சரஸ்வதியை காதலித்து மணந்து கொண்டார்.


இந்த பாடலைக்காண



இறந்தவன சொமந்தவனும் இறந்துட்டான்..,


அதை இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துட்டான்..,


இறந்தவன சொமந்தவனும் இறந்துட்டான்..,


அதை இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துட்டான்..,


பறந்து பறந்து, பணம் தேடி, பாவக் குளத்தில் நீராடி..,


பறந்து பறந்து பணம் தேடி, பாவக் குளத்தில் நீராடி,


பிறந்து வந்த நாள் முதலாய், பேராசையுடன் உறவாடி,


இறந்தவன.., அப்படி.., இறந்தவன, சொமந்தவனும் இறந்துட்டான்..,


அதை இருப்பவனும், எண்ணிப் பாக்க மறந்துட்டான்..,


தாயாரின் வேதனையில் பிறக்கிறான்..,


மனுஷன், தன்னாலே துடிதுடிச்சு இறக்கிறான்..,


தாயாரின் வேதனையில் பிறக்கிறான்,


 மனுஷன், தன்னாலே துடிதுடிச்சு இறக்கிறான்,


இடையில் ஓயாத கவலயில, மிதக்கிறான்..,


இடையில் ஓயாத கவலயில, மிதக்குறான்..,


ஒரு நாள், உடல மட்டும் போட்டு எங்கோ, பறக்குறான்,


ஒரு நாள் உடல மட்டும், போட்டு எங்கோ, பறக்குறான், அப்படி..,


இறந்தவன, சொமந்தவனும் இறந்துட்டான்..,


அதை இருப்பவனும், எண்ணிப் பாக்க மறந்துட்டான்..,


இளமையிலே சில நாள், முதுமையிலே சில நாள்,


இளமையிலே சில நாள், முதுமையிலே சில நாள்,


இன்பத்திலே சில நாள், துன்பத்திலே சில நாள்,


அன்னையும் மனைவியும், அருமைப் பிள்ளையும்,


அன்னையும் மனைவியும், அருமைப் பிள்ளையும்,


கண்ணீர் சிந்திடவே, கடைசி வளி ஒரு நாள்.., அப்படி..,


இறந்தவன, சொமந்தவனும், இறந்துட்டான்.., அதை இருப்பவனும், எண்ணிப்பாக்..க..?, மறந்துட்டான்,         


படம்   இரவும் பகலும்   (1965)


பாடலாசிரியர்  மருதகாசி


இசை  டி.  ஆர். பாப்பா


இயக்குநர்   ஜோசப் தாலியாத் 


நடிகர்கள்  ஜெய்சங்கர், எஸ்.. ஏ. அசோகன், வசந்தா மற்றும் பலர்


பாடல் பாடியவர்  நடிகர் எஸ்.. ஏ. அசோகன்


 


கர்ணன் படத்தில் நட்புக்காக ஒரு காட்சி காண



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி