தி.மு.க தொண்டர்களுக்கு விருத்தாசலத்தில் தலைமை கழக தீர்மானக்குழு உறுப்பினர் குழந்தை தமிழரசன் அரிசி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கினார்.
தமிழக அரசு அறிவித்துள்ள 144 ஊரடங்கு தடை உத்தரவால் வறுமையில் வாடும் தி.மு.க தொண்டர்களுக்கு விருத்தாசலத்தில் தலைமை கழக தீர்மானக்குழு உறுப்பினர் குழந்தை தமிழரசன் அரிசி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கினார்.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி அவர்கள் ஒன்றிணைவோம் வா என்ற அழைப்பின் அடிப்படையில் விருத்தாசலம் தொகுதியில் பதிவு செய்த 144 ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கடலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வே.கணேசன் அவருடைய வழிகாட்டுதல்படி நாங்கள் தொடர்ந்து நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர் துடைப்பதற்காக தளபதி அவருடைய ஆணையை ஏற்று அவர்களுக்கு வேண்டிய அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் தொடர்ந்து வழங்கி வருகிறோம் அந்த அடிப்படையில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பதிவு செய்தவர்களுக்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்திலும் நகரத்தை ஒட்டிய பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் தலைமை தீர்மானக்குழு செயலாளர் குழந்தை தமிழரசன் வழங்கி வருகிறார்.
இந்த பொருட்களை பெற்றுக் கொண்ட மக்கள் திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி அவர்களுக்கு நன்றியும் நாங்கள் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து நிவாரண பொருட்களை சந்தோஷமாக பெற்று சென்றனர்.
இதில் விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி, நகர துணை செயலாளர் ராமு, உதயநிதி மன்ற கடலூர் மாவட்ட பொருளாளர் தியாக.இளையராஜா, நகர மாணவரணி செயலாளர் உதயன் மகேஷ், நகர தி.மு.க பூவராகன், ஐயப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பீப்பிள்டுடே செய்திகளுக்காக.
கடலூர் காமராஜ் பீப்பிள்டுடே செய்திகளுக்காக.
Comments