தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில் மண்டபத்தில் இசைத் தூண்கள்


தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில் மண்டபத்தில் இசைத் தூண்கள்



தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் விழாக் கால நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. இவை வேதம் ஓதுவது போன்ற ஒலியைத் தர வல்லவை எனச் சொல்லப்படுகிறது.






 

 




தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில்



 


இசைத் தூண் என்பது, இசை எழுப்பும் வகையில் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட கற்றூணைக் குறிக்கும். பெரும்பாலும் கோயில் மண்டபங்களின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் இசைத்தூண்கள் தமிழகத்தின் பல கோயில்களில் காணப்படுகின்றன. இசைத்தூண்கள் கட்டிடக்கலையின் ஒரு அம்சமாகவும் அமைவதால், பல்வேறு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியவையாக அமைகின்றன.

தென்னிந்தியாவில் இசைத் தூண்கள் தமிழ்நாட்டிலும் அயல் மாநிலங்களிலும் காணப்படுகின்றன. எனினும், தமிழ்நாட்டில், குறிப்பாகப் பண்டைய பாண்டிய நாட்டைச் சார்ந்த பகுதிகளிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றன. அத்துடன் இப்பகுதியில் உள்ள இசைத் தூண்களே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.



தற்காலத்தில் இவ்வாறான இசைத் தூண்கள் பார்ப்பதற்கு ஆச்சரியம் தருவனவாகவும், அதனால், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாகவும் மட்டுமே காணப்பட்டாலும், முற்காலத்தில் சில இசைத் தூண்கள் பூசை நேரங்களில் இசை எழுப்பப் பயன்பட்டன என்றும், வேறு சிலவற்றில் இசை மீட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இசைத் தூண்களை இசை எழுப்பும் முறையைக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று தட்டும்போது இசை எழுப்புவன. மற்றது, தூணில் அமைக்கப்படும் துளைகளினூடாக ஊதும்போது இசை எழுப்புவன. ஊதும்போது இசை எழுப்பும் தூண்கள் காற்று இசைக் கருவிகளின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவை “துளை இசைத் தூண்கள்” அல்லது “குழல் இசைத் தூண்கள்” என அழைக்கப்படுகின்றன.

இவற்றில் இருந்து சங்கு, எக்காளம் ஆகிய கருவிகளின் ஒலியையே பெற முடியும். இசைத்தூண்களின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை, சுருதித் தம்பம், கானத் தம்பம், லயத் தம்பம், பிரதார்ச்சண தம்பம் என்பன. இசைத்தூண்களின் குறுக்கு வெட்டுமுகமும் பல்வேறு வடிவங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றுள், வட்டம், நெல்லிக்கனி, சதுரம், புரி, செவ்வகம், பல்கோணம் ஆகிய வடிவங்கள் குறிப்பிடத்தக்கவை.

பெரும்பாலான இசைத்தூண்கள் நடுவில் ஒரு கனமான தூணையும் அதைச் சுற்றிலும் அமைந்த விட்டம் குறைந்த பல தூண்களையும் கொண்டவை. இவை அனைத்தும் ஒரே கல்லிலேயே செதுக்கப் படுகின்றன. நடுத் தூணே கட்டிடக் கூரையின் சுமை யைத் தாங்குமாறு அமைக்கப்படுகின்றன.

வெளித் தூண்களே இசை எழுப்பும் தூண்கள். சில இடங்களில் இசைத் தூண்கள் இசை எழுப்பும்போது அருகில் உள்ள மற்றத் தூண்களும் சேர்ந்து ஒத்திசைவாக இசை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் நடுத் தூணின் பருமன் காரணமாக அது அதிர்ந்து இசை எழுப்புவதில்லை. இசைத் தூண்கள் மூன்று முதல் ஆறு அல்லது ஏழு அடிகள் வரை உயரம் கொண்டவை. இசைத் தூண்களைச் செய்வதற்கான கற்கள் சாதாரண கற்களில் இருந்து வேறுபட்டுச் சிறப்பான இயல்புகளைக் கொண்டவை. இவற்றைத் தேடிக் கண்டுபிடித்தே சிற்பிகள் இசைத் தூண்களை மிகுந்த கவனத்துடன் உருவாக்கியுள்ளனர். இசைத் தூண்கள் செய்யப்பட்ட கற்கள் கருப்பு, சாம்பல், சந்தன நிறம் எனப் பல்வேறு நிறச் சாயைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் விழாக் கால நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. இவை வேதம் ஓதுவது போன்ற ஒலியைத் தர வல்லவை எனச் சொல்லப்படுகிறது.




 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி