போர்த்திய வேடம்

இன்றைய  இலக்கிய பக்கத்தில் கவிதை


 


போர்த்திய வேடம்*



       


நிறைந்த நெற்றியில்
செந்நிறக் குங்குமத்தின்
ஆரத் தொலைவை அதிகமாக்கி
இயல்பைவிடச் சற்று வேறுபடுத்தியிருந்தாள்...



உடுத்தியிருக்கும் ஆடைகளில்
கொஞ்சமும் அகப்படவில்லை
எங்கேனும் சிறு கிழிசல்...
அங்கங்களிலும் அழுக்கற்றுத்தான் அவள்...


பிரத்யேக உடல்மொழியின்றி
தனக்கேயானச் சிரித்த முகத்தில்
உள்ளம் கேட்கச் சொன்னதில்
ஏந்திக் கொண்டிருந்தாள் கைகளை...


வாடித் தூங்கும்
மழலைத் தேவைக்கென
பால் பாக்கெட்டுக்கும்
பட்டர் பிஸ்கெட்டுக்குமாய்ச்
சொல்லித்தான் கேட்கிறாள்
வீடு தோறும்...


உடுத்த உடையுண்டு
உறங்க இடமுண்டு
உண்ண உணவு...?


வேண்டா வேடத்தில்
உடையும் பாத்திரங்களின்
உள்ளழுகை உதிர்க்கும்
கண்ணீரின் உப்பறிவர் எவரோ...?


#கனகாபாலன்


கவிதையை  மனமுவந்து பிரசுரிக்க வழங்கியமைக்கு மிகவும் நன்றி



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,