தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள்

தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள்


மே 31, 2020    10:00



தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை.


தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை.


தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.



தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.


சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.


தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.


இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந்திருக்கிறது.









 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,