கோதுமை வெங்காய போண்டா

கோதுமை வெங்காய போண்டா


22-06- 2020


 கோதுமை மாவை வைத்து வெங்காயம் சேர்த்து போண்டா செய்யலாம்


 



 


கோதுமை வெங்காய போண்டா


தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு  - 1 கப்


அரிசி மாவு  - 1/2 கப்
உப்பு  - தேவையான அளவு
தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம்  - 1
பச்சை மிளகாய்  - 3  
கறிவேப்பிலை  - சிறிதளவு


கொத்தமல்லி - சிறிதளவு


 





செய்முறை :
வெங்காயம், ப,மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்.
ஒரு சுத்தமான பவுலில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு நன்றாக கலக்க,
தயிர்,  பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துகொள். மாவு கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்தில் கரை  1 மணி நேரம் ஊறவை.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து போடு.. போண்டா ஒருபுறம் நன்றாக வெந்து சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரித்து எடு.

இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி அருமையாக இருக்கும்.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி