59 செயலிகளுக்கு தடை சீனா கவலை

59 செயலிகளுக்கு இந்தியா தடை


சீனா கவலை



புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது கவலை அளிப்பதாகவும், அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.


இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உளவுத்துறைகள் பரிந்துரை செய்தன. இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.


 






 


இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாவ் லிஜியான் கூறியதாவது: இந்திய அரசின் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது. இந்த உத்தரவு குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியாவின் சீனாவின் வணிகத்தை பாதுகாக்க வேண்டியது அந்நாட்டு அரசின் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,