கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் மலச்சிக்கல் வராமலிருக்க 

கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் மலச்சிக்கல் வராமலிருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்


26-06-2020 12:52


 கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் இந்த உணவுகளை சாப்பிடலாம்


கர்ப்பிணிகள் சத்தான உணவை மட்டுமே எடுத்து கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றைத்தான் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

தானியங்களில் போலிக் அமிலம் (வைட்டமின் – பி) அடங்கியிருக்கிறது.  இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகையை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை எடுத்து கொள்ளலாம்.கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்குத் தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்தப் பழங்கள் எல்லாவித ஊட்டசத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்குப் பெரிதும் உதவுகிறது.  அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலைப் போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.  பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள்,  9 -ஆவது மாதத்தில் எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.

சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கியிருக்க, இது கருவிலிருக்கும் குழந்தைக்குத் தேவையான சத்துக்களையும் தரவல்லது. கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்றவற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

கர்ப்பிணிகள்  9ஆவது மாதத்தில் 2 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டியது அவசியமாகும். ஆம், எவ்வளவு தண்ணீர் தேவையோ அதே அளவுக்கு கருவிலிருக்கும் குழந்தைக்குத் தண்ணீர் தேவைப்படும்.  இதனால் கருவைச் சுற்றி காணப்படும் பனிக்குட நீர் குறையாமல் பார்த்துக் கொள்ளவும் செய்கிறது.


இப்படி கர்ப்பிணிகள் எவற்றை உண்ண வேண்டும்,  உண்ணக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது முடிந்தளவுக்கு வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்திடுதல் வேண்டும். வாங்கும் ஒரு பொருளின்மீது பல வித கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் 90 சதவிகித சிறந்த உணவாவது கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரையை அடிக்கடி பெற வேண்டியது மிகவும் முக்கியம்.

 

  

 

 

 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,