தந்தை அன்பின் முன்னே

 


               அன்புகள் பலவிதம். பிறந்த குழந்தையிடம் செலுத்தும் அன்பு ஒருவிதம்.  குழந்தை வளர, வளர, ஒவ்வொரு காலகட்டத்திலும் செலுத்தும் அன்பு ஒருவிதம். பள்ளியில் ஆசிரியர் காட்டும் அன்பு ஒருவிதம். உடன் பயிலும் மாணவர்கள் காட்டும் அன்பு ஒரு விதம். நண்பர்கள் என்பவர்கள் காட்டும் அன்பு ஒருவிதம்.  வாலிபப் பருவத்தில் வேறு பாலினத்தவரிடம் காட்டும் அன்பு ஒரு விதம்.



 


 


 


கல்லூரியில் பெறும் அன்பு ஒருவிதம்.  வீதியில் பெறும் அன்பு ஒருவிதம். கடைகளிர்ல அன்பு ஒருவிதம்.


பெரியவர்கள் காட்டும் வயது ஒரு விதம். மணந்தபிறகு உரிமையுள்ளவள் காட்டும் அன்பு ஒருவிதம். பிறந்த குழந்தை தாயிடம் காட்டும் அன்பு ஒருவிதம். தந்தை குழந்தையிடம் காட்டும் அன்பு ஒருவிதம்.  மகளோ, மகனோ தந்தையிடம் காட்டும் அன்பு ஒருவிதம்.  தாத்தா பாட்டி காட்டும் அன்பு ஒருவிதம்.  அலுவலகத்தில் பெறப்படும் அன்பு ஒரு விதம். இப்படி, ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு நபரிடமும் பெறும் அன்பு ஒருவிதம்.  இப்படி அன்பு பலவகை.  அதில், ஒருவகை அன்பைப் பற்றி  பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தெரிவிக்கும் ஈடு இணையற்ற அன்பை இன்றைய தினம் பார்ப்போம், கேட்போம்.  


 


தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா


மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்


தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே


தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும்
தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே



படம்  கேடி பில்லா கேடி ரங்கா


பாடியவர்  விஜய் ஜேசுதாஸ்


பாடலாசிரியர் நா. முத்துக்குமார்


இசை யுவன் சங்கர் 


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி