நீரில் நனையும் சிவலிங்கங்கள்..
நீரில் நனையும் சிவலிங்கங்கள்..
! வித்தியாசமான லிங்கங்கள் சில திருத்தலங்களில் காணப்படுவது போல புனிதமான நீரில் நனையும் சிவலிங்கங்களும் உள்ளன
. ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்கா ஆலயத்தில் அருள்புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊறிக்கொண்டேயிருக்கும். லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக்கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத் தான் தரிசிப்பார்கள்.
சீர்காழி திருக்காளமுடையார் கோவிலிலும் லிங்கம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம்
. திருவேடகம் திருத்தலத்தில் மூலவர் லிங்கத்தின் முடியிலுள்ள பள்ளத்திலிருந்து தண்ணீர் ஊறி வெளிவந்து கொண்டிருக்கும். தஞ்சை பெரிய கோவில் மூலவர் பெரிய திருவுருவில் அருள்புரிகிறார். கருவறையைச் சுற்றி சந்திரகாந்தக் கற்கள் அமைந்திருப்பதால், கோடைக் காலத்தில் கருவறையின் உட்சுவர்களில் நீர்த்துளிகள் படிந்து, சிவலிங்கம் குளிர்ச்சியாக இருக்கும். மேலும், பெரிய கோவிலிலுள்ள சிவகங்கைத் தீர்த்தக் குளத்தின் நடுவில் ஒரு லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் தீர்த்தக்குளத்தில் மூழ்கியே இருக்கும். கடுமையான கோடைக்காலத்தில் நீர் வற்றும்போது மட்டும் லிங்கத்தை தரிசிக்கலாம்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கருவறையின் மேல் தளம் சந்திரகாந்தக் கற்களால் அமைந்துள்ளதால், எப்பொழுதும் சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் சிவலிங்கத்தின் மீது விழுந்த வண்ணம் உள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மூலவரின் திருவடியில் தேவதீர்த்த நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். இந்த நீர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது
Comments