இவரைத் தெரிந்து கொள்வோம் ஆர்ட் இந்தியா ஓவியன் என்கிற நா,.ரவிச்சந்திரன்

இவரைத் தெரிந்து கொள்வோம்


ஆர்ட் இந்தியா ஓவியன் என்கிற நா,.ரவிச்சந்திரன்


 


 



         ஆதிமனிதன் பாறைகளில் வரைந்தான். அதன் பின் மணல் ,காகிதத்தில் வரைந்தான். தற்போது டிஜிட்டலாக கணினியில் வரைய துவங்கிவிட்டான். ஒரு கலையை நாம் யாருக்கும் கற்று கொடுக்க முடியாது. கலை என்பது இயற்கையானது. அது ஒவ்வொருவருக்கு உள்ளேயும் விதைக்கப்பட்டிருக்கிறது. அதை மெருகேற்ற மட்டுமே முடியும். அதில் ஓவியக்கலை உயர்ந்தது. தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் ஓவியங்களின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம்.


அந்த வகையில் தற்போது டிஜிட்டல் ஓவியத்தில் வித்தியாசமான முறையில் கலக்கி வரும் நெய்வேலி நா. ரவிச்சந்திரன் அவர்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்


     இவர் கடலூர்  மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, தெற்கிருப்பு


என்கிற ஒரு சிறு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தாலும்


இவரது குடும்பம் அருகிலுள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில்


குடியேறிவிட்டது . இவரது பள்ளிப்படிப்பு மேல்நிலை வரை நெய்வேலி டவுன்ஷிப்பில்தான்  படிப்புடன்  இவர்  ஆர்வம் ஒவியத்தில் அதிகமாக இருந்ததது


        சிறு வயது முதல் படங்கள் வருவதில் மிக ஆர்வமாக இருந்துள்ளார்


பனிரெண்டாம் வகுப்பில் ஓவிய போட்டியில் கடலுர் மாவடத்தில்  முதல் மாணவராக பரிசு வென்றுள்ளார் அதன் பிறகு 1985ல் கும்பகோணம் அரசினர் ஓவிய  கல்லுரயில் ஐந்தாண்டு  பட்டபடிப்பு சேர்ந்தார் அதை முடித்ததும் அப்படியே திருப்பூர் சென்று மூன்று ஆண்டுகள் அங்குள்ள ஒரு பணியன் கம்பெனியில் ஓவியராக  பணியாற்றி உள்ளார்


     பிறகு தனது  சொந்த ஊரான  நெய்வேலி வந்து ஆர்ட் இந்தியா (ART INDIA) என்னும் விளம்பர கம்பெனி (ADVERTISING AGENCY) ஒன்றை  நடத்தி உள்ளார்


மிக சிறப்பாக சென்ற நேரத்தில் கம்ப்யூட்டர் வர அத்தனை ஓவியர்களின்


வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கிப்போய்விட்டது


      கையால் வரைவதை காட்டிலும் கணிணியில் மிக துல்லியமாக


ஓவியங்களும் டிசைன்களும் உடனே கிடைக்க மக்கள் கணிணி பின்னே செல்ல ஆரம்பித்து விட்டார்கள்


    ,இவரும்   கணிணியில்  டிப்ளமோ படிப்பு  படித்து தேர்ச்சி பெற்று கணிணி மூலம் ஓவியம் வரைய ஆரம்பித்தார்


   பிறகு துபாய் சென்று  அங்கு ஒரு  கம்பனியில் ஓவியராக  நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்


     இவரின் துணைவியார் சகிலா அவர்களின் விருப்பத்திற்கிணங்க துபாயில்  ஹோட்டல் தொழிலை தொடங்கி வெற்றிகரமாக நடத்தியுள்ளார்


ஹோட்டல்  தொழில் புரிந்தாலும் தொடர்ந்து கணிணியில்  ஓவியம் 


வரைந்து கொண்டிருந்தார்


             சுமார் 18  ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்து சொந்த ஊரான na நெய்வேலியில் செட்டில் ஆகிவிட்டார் . தற்போது கணிணியில்  டிஜிட்டல் பெயிண்டிங்  செய்து கலக்கி  கொண்டு இருக்கிறார்


   இவருடைய டிஜிட்டல் ஓவியம் மற்றவர்களைவிட முற்றிலும் மாறுபட்டதாக  உள்ளது


    இவருடைய அனைத்து ஓவியங்களையும் பேஸ் புக்கில்


ART INDIA OVIYAN என்கிற பக்க்த்தில் சென்று பார்க்கலாம்


இவரை தொடர்பு கொள்ள Mail id: oviyan2@gmail.com


Fb id : ARTINDIA OVIYAN


           இவர் தனது ஓவிய கல்லுரி நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிகளில் ஓவிய கண்காட்சி நடத்தி வருகிறார்


         பல்வேறு ஓவிய போட்டிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார்


        மற்றும் ஸ்கிரின்  பிரின்டிங் பயிற்சி வகுப்புகளையும் போட்டோகிராபி பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்



        நட்புகளின்  ஆசைக்காக சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்


 


 



 இவருடைய சில ஓவியங்களின் தொகுப்பை இங்கு காணலாம்


 


-----


ஓவியங்களின் தொகுப்பை இங்கு காணலாம்




 


 






கட்டுரை




Welcome to Padam Eppadi Irukku! Here you'll Find All the Latest Kollywood, Tollywood and Hollywood Movies Public Reactions, Reviews & their Opinion. Hit the Subscribe Button and Click the Bell Icon to Stay Updated : http://bit.ly/PadamEppadiIrukku


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி