மும்பையை பாராட்டிய உலக சுகாதார நிறுவனம்.

மும்பையை பாராட்டிய உலக சுகாதார நிறுவனம்..!! நேய் தடுப்புக்கு சிறந்த உதாரணம் என வியப்பு...


 


!!


கடந்த ஆறு வாரங்களில் கொரோனா தொற்று இரு மடங்குக்கும் அதிகமாக இருந்தபோதிலும் கொரோனா வைரஸ்தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கு மும்பை தாராவி சிறந்த உதாரணம் என்றும், அந்த  அமைப்பின்  இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த  வைரஸ் சுமார் 190 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 1.26 கோடி பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 5 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். சுமார்  73 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மற்ற நாடுகளை விட இந்த வைரஸால் இந்தியா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


 


இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம் வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 461 போர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே குறிப்பாக மும்பை நகரின் தாராவியில்  நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும் அம்மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலமாக தாராவியில் கொரோனா தோற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நிச்சயம் வைரசுக்கு எதிரான இந்த போரில் வென்றே தீருவோம் என மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெனிவாவில்  வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய உலக சுகாதார  நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், கடந்த ஆறு வாரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ள போதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளது என்பத பல நாடுகள் நிரூபித்துள்ளன.


 


இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் இந்தியாவின் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான தாராவியை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளன. எவ்வளவு மோசமான நோய்த்தொற்று என்றாலும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸை கட்டுக்குள் கொண்டுவர முடியும்  என்பதை இந்நாடுகள் காட்டியுள்ளன. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் மும்பையின் தாராவி போன்ற பகுதிகள் மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த பகுதியாக உள்ளன. அப்பகுதியில் சமூக ஈடுபாடுகளும் அதிகமாக உள்ள நிலையில், முறையான சோதனை மற்றும் தடமறிதல், உடனுக்குடன் தனிமைப்படுத்துதல், மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் நோய்பரப்பும் தொடர் சங்கிலிகளை உடைத்து, வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு இவைகள் சிறந்த உதாரணம், இன்னும் கூட வைரஸ் தொற்றை கட்டுப்படித்த முடியும் என்பதற்கு இப்பகுதிகள் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகளில் குறைந்த அளவிலேயே சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது, அதிவேக வளர்ச்சி உள்ள நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், அங்கு நோய்த்தொற்று அதிகரிப்பதை காணமுடிகிறது. எனவே தேசிய ஒற்றுமை மற்றும் உலகளாவிய ஒற்றுமையுடன் இணைந்து நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் நிச்சயம் தொற்றுநோயை முடக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.


 



ருத்ரா


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி