சில்லறை வர்த்தகத்துக்கு கடும் பாதிப்பு 100 நாளில் ரூ.15.5 லட்சம் கோடி இழப்பு

சில்லறை வர்த்தகத்துக்கு கடும் பாதிப்பு 100 நாளில் ரூ.15.5 லட்சம் கோடி இழப்பு


கையை பிசைந்து கொண்டிருக்கும் மத்திய அரசுபுதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் சில்லறை வர்த்தகத்துக்கு கடந்த 100 நாட்களில் ரூ.15.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகஅகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் பல மாநிலங்களில் சில தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. இதனால் சில்லறை வர்த்தகர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. பொருட்கள் சப்ளை போதுமானதாக இல்லாததுபுதிய முதலீடுகளுக்கு நிதி பற்றாக்குறை என பல்வேறு வகையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அகில இந்திய வியாபாரிக் கூட்டமைப்பு தலைவர் பிரவீன் கந்தேல்வால் கூறியதாவது:


கொரோனா ஊரடங்கு சில்லறை வர்த்தகத்தில் கடும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 100 நாட்களில் ரூ.15.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 45 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் முன்னேற்றம் எதுவும் இல்லை. வாடிக்கையாளர் வருகை வெகுவாக குறைந்து விட்டது. 10 சதவீதம் பேர்தான் கடைக்கு வருகின்றனர் என்றார். சில்லறை வர்த்தகர்களின் நிலையை கருத்தில் கொண்டுவரிகளில் தளர்வுகள் அறிவிக்க வேண்டும். வங்கி கடன்களை கூடுதல் வட்டி அல்லது அபராதம் இன்றி செலுத்த வழி வகை செய்ய வேண்டும். வர்த்தகர்களுக்கு நேரடியாக பணப்பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் லட்சம் கோடியும்மே மற்றும் ஜூன் மாதத்தில் தலா ரூ.லட்சம் கோடிஜூலை முதல் பாதியில் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் உதவிக்கரம் இருந்தால்தான் இந்த கடும் பாதிப்பில் இருந்து மீள முடியும் என தெரிவித்துள்ளது. ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களின் வருவாய் குறைந்து விட்டது. இதனால் செலவுகளை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நுகர்வோர் தேவை வெகுவாக குறைந்து விட்டது எனவும்இது சஜக நிலைக்கு வர நீண்டகாலம் பிடிக்கும் எனவும் பொருளாதார ஆய்வு அமைப்புகள் சில தெரிவித்துள்ளன. இதற்கேற்ப சில்லறை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டு வர தேவை
வர்த்தகர்களுக்கு வரிச்சலுகைகள்
கூடுதல் வட்டிஅபராதம் இன்றி கடன் செலுத்த நடவடிக்கை
அரசிடமிருந்து நேரடி பணப்பலன்கள் 


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,