கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி –
கொரோனாவால் 100 ஆண்டுகளில்
இல்லாத பொருளாதார நெருக்கடி –
11-07- 2020 - 11:40
நாட்டில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கொரோனா பாதிப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி
ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
புதுடெல்லி:
7 வது எஸ்பிஐ மற்றும் பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:-
கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உற்பத்தி, வேலைவாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. நிதி அமைப்பை பாதுகாக்கவும், பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 2019 முதல், ஒட்டுமொத்த அடிப்படையில், கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம். பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தாக்கம் தொடங்கி, ஊரடங்கு நடைமுறைக்கு வந்து, சுமார் 107 நாட்களாகி விட்டன. கற்பனைக்கெட்டாத, மிகப் பெரிய சுகாதார, வேலைவாய்ப்பில்லாத, பொருளாதார தாக்குதலுக்கு, நாட்டின் சுமார் 99.9 சதவீத மக்கள் ஆளாகி உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. இது மத்திய, மாநில அரசை நிர்வகிக்கும் அமைச்சர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரலாறு படித்த, நிர்வாகத் திறன் உடைய நிர்வாகிகள், பொருளாதார மேதைகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூகநலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்கள் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் தெரியாமல் இருக்க முடியாது. அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஒன்று கூடி, சுமார் 210 நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இத்தகைய இக்கட்டான சூழ் நிலையில் நன்கு ஆழமாக சிந்தித்து, ஆலோசித்து, கலந்து பேசி, ஆக்கபூர்வமான கருத்துக்களை, ஒவ்வொரு துறையினரும் என்ன, என்ன செய்ய வேண்டும் என்று தெரிவித்தால் நலம் பயக்கும். செய்வார்களா, என்று கேட்காமல், செய்ய வேண்டுமென்று மக்கள் நலன் கருதி எதிர்பார்க்கும். . . . . . .
Comments