12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டிக் கொடுத்த மோப்ப நாய்


12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை


காட்டிக் கொடுத்த மோப்ப நாய்


ஜூலை 20, 2020 08:23


12 கி.மீ. தூரம் மோப்பம் பிடித்து சென்றுகொலையாளியை மோப்ப நாய் காட்டி கொடுத்தது. அந்த மோப்ப நாய்க்கு போலீஸ் அதிகாரி மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்து உள்ளார்.


 


மோப்ப நாய் துங்காவுக்கு மாலை அணிவித்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பரிவுடன் தடவி கொடுப்பதை படத்தில் காணலாம்.


பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சூலக்கெரே பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.



கொலை நடந்த இடத்திற்கு 9 வயதான போலீஸ் மோப்ப நாய் துங்கா வரவழைக்கப்பட்டது. அங்கு இருந்து ஓடிய மோப்ப நாய் துங்கா, சூலக்கெரேயில் இருந்து 2 மணி நேரம் விடாமல் ஓடி சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசிபுரா தாண்டா கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு போய் நின்றது. அந்த வீட்டில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பெயர் சேத்தன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது நண்பரான சந்திரா நாயக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.


அப்போது திருட்டு நகைகளை பங்கு பிரிக்கும்போது ஏற்பட்ட தகராறில் சந்திரா நாயக்கை, சேத்தன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மோப்ப நாய் துங்காவுக்கு மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே மாலை அணிவித்து பாராட்டினார். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைத்தலங்களில் வெளியாகி பலரது ஆதரவை பெற்றுள்ளது.


பின்னர் துங்காவை பராமரித்து வரும் சிவநாயக்கா என்பவருக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.


இதுகுறித்து சிவநாயக்கா கூறும்போது, பொதுவாக மோப்ப நாய்கள் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் தான் மோப்பம் பிடித்து ஓடும். ஆனால் துங்கா 12 கிலோ மீட்டர் மோப்பம் பிடித்து ஓடி கொலையாளியை பிடிக்க உதவி செய்து உள்ளது. துங்கா சிறப்பு வாய்ந்த மோப்ப நாய். துங்காவால் இன்னும் 15 ஆண்டுகள் போலீஸ் துறையில் சேவை செய்ய முடியும் என்றார். 


 


கூடுதல் டி.ஜி.பி. முகக் கவசம் அணியவில்லையே அவர் மேல் யார் நடவடிக்கை எடுப்பது என்றெல்லாம் கேட்கக் கூடாது. அப்பாவி பொதுமக்களுக்குத்தான் அந்த உபதேசம் எல்லாம். ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள், வாகனத்தைப் பறி முதல் செய்வார்கள், அபராதமும் வதிப்பார்கள்.  முக்க் கவசம் அணியாமல் நடமாடினால், தண்டனை அளிப்பார்கள்.  ஆனால், அத்துறையின் உயர் அதிகாரிகள் அப்படி நடந்து கொண்டால், யார் நடவடிக்கை எடுப்பது என்று யாரைக் கேட்பது? 









 

  

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,