தமிழகத்தில்  2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஓன்றிற்கு 5 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருத்துறைப்பூண்டியில் பேட்டி.

தமிழகத்தில்  2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஓன்றிற்கு 5 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருத்துறைப்பூண்டியில் பேட்டி....


தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, பருப்பு ,ஆயில் உள்ளிட்ட விலையில்லா பொருட்களுடன் நபர் ஒருவருக்கு 5 கிலோ கூடுதல் அரிசி வழங்கும் நிகழ்ச்சியை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது....


தமிழகத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களில் 38 % பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர், 62% பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப உள்ளனர்.


 நபருக்கு 5 கிலோ கூடுதல் அரிசியை தமிழகத்தில் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, தமிழக அரசு கூடுதலாக 439 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியை வழங்கி வருகிறது. அதோடு சேர்த்து பருப்பு, ஆயில், சர்க்கரை போன்றவையும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
  தமிழகத்தில் மாதமொன்றுக்கு 3.4 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக 6.8 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் பின்பற்ற வேண்டிய நிலையில் அதில் ஒரு திட்டமான ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் எனவே அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
 
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர். பாலா. மு. அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி