வங்கியில் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ரூ.1.47 லட்சம் கோடி கொள்ளை

 

புதுடில்லி: வங்கியில் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ரூ.1.47 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளதாக  அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (ஏஐபிஇஏ) கடந்த இரு நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தது.


 



நாட்டில் உள்ள அரசு வங்கிகளில் மட்டும் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று ரூ.1.47 லட்சம் கோடியை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன. இதில் ரூ.200 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 147 நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தக் கடன் தொகையின் மதிப்பு ரூ.67 ஆயிரத்து 609 கோடியாகும். இதில் முதல் 10 இடங்களில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்ற நிறுவனங்களாகும்.



மொத்தமுள்ள 17 அரசு வங்கிகளில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கியில் 685 நிறுவனங்கள், ரூ.43 ஆயிரத்து 887 கோடி மதிப்பிலும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 நிறுவனங்கள், ரூ.22 ஆயிரத்து 370 கோடி மதிப்பிலும் கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. அதேபோல், பேங்க் ஆப் பரோடாவில் ரூ.14,661 கோடியும், பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.11,250 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.7,028 கோடியும், கனரா வங்கியில் ரூ.5,276 கோடியும், இந்தியன் வங்கியில் ரூ.1,613 கோடியும் பல நிறுவனங்கள் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



ஏழைகள், விவசாயிகள், தாங்கள் வாங்கிய குறைந்த கடனைத் திருப்பச் செலுத்த வில்லையென்றால் பல்வேறு கெடுபிடிகளுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். .  ஆனால்,  பெரும் பண முதலைகள் வெளிநாடுகளில் தங்கியிருந்து  கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்தக் கொள்ளை குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும்,  யாரையும் தப்ப விடக் கூடாது,  மொத்த பணத்தயும் திருப்பிப் பெற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு செவி மடுக்க வேண்டும்.


நாட்டை ஏமாற்றி ஒருவர் கைலாய நாடு உருவாக்கியுள்ளதாக, அறிவித்துள்ளார், ஆன்மிகவாதி என்ற போர்வையில். அவர் எங்கிருக் கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற பதில் போல் இந்தப் பொருளாதாரக் குற்றவாளிகளும் தப்ப விடக் கூடாது 



 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,