உங்களை இளமையாக காட்டும் புருவங்கள்

உங்களை இளமையாக காட்டும் புருவங்கள் வேண்டுமா?


29.07. 2020


 


இளமையாக காட்டும் புருவங்கள்



புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் இளமையாக காண்பிக்கும். புருவம் எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகள்.


அழகான புருவங்கள் ஒருவரது முகத்தை உயர்த்திக் காட்டும். புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் இளமையாக காண்பிக்கும். புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகள்.

கற்றாழை : சருமத்திற்கும், கூந்தலுக்கும் என்ன பயன்படுத்துவது என்றால் முதலில் வரும் பொருள் கற்றாழைதான். எல்லோருக்கும் தெரிந்த பொருள்தான். ஆனால், எளிதில் கிடைப்பதால் பயன்படுத்துவதில்லை.. இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது. சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோலை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு எந்தப் பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.



வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்து புருவங்களில் தடவி. அரை மணி நேரம் கழித்து கழுவி விட்டால்  இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும்.  இதில் உள்ளநிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.


பழங்காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் மிகவும் பயனுள்ள பொருளான  விளக்கெண்ணெயை விரல் நுனிகளால் தடவி, மசாஜ் செய்து ஒரு மணிநேரம் வைத்திருந்து துடைத்துவிடலாம். தினமும் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெயில், புரதச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது.

ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால்,  புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை புருவங்களுக்கு தினமும் தடவ வேண்டும்.


முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது புருவங்களை அடர்த்தியாக வளர உதவுவதுடன, கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

ஜோஜோபா எண்ணெய் புருவம் வளருவதற்கு ஏதாவது அடைப்பு இருந்தால் அதை நீக்கிவிடும். அதனால் முடி வேகமாக வளரும். இந்த எண்ணெய்யையும் தூங்கும்போது பயன்படுத்தலாம்.


வெங்காயத்தில், சல்பர், செலினியம், மினெரல்ஸ், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளதால் புருவம் நன்றாக வளரும். மயிர்கால்களை நன்றாக உறுதியாக்குகிறது. வெங்காயத்தை தோல் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

தேங்காய் எண்ணையே போதுமானது! இது தண்ணீரைப்போல இருப்பதால், பெரும்பாலும் உதாசீனப்படுத்துகிறோம். ஆனால் தேங்காய் எண்ணெய் கண்டிஷனர் போல வேலை செய்யும். இயற்கையான புரதச்சத்து முடி உடைவதை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடிக்காலில் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம்.


 



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி