5 வயது மகனை காண 1,800 கி.மீ பயணம் செய்த தாய்

5 வயது மகனை காண 1,800 கி.மீ பயணம் செய்த தாய்


 ஜூலை 27, 2020



 


 


ஜாம்ஷெட்பூர்: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டன. ஆனால், அடுத்தடுத்த ஊரடங்கு தளர்வினால், தற்போது சில பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி, பைக்குகள் அனுமதிக்கப்படுகின்றன.
இதனால், மாநிலம் கடந்து வேலை பார்த்து வரும் சிலர் சிறப்பு ரயில்கள் மூலமாகவோ, சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக பல்லாயிரம் கி.மீ பயணம் செய்து சொந்த ஊர் செல்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் தனது 5 வயது மகனை பார்க்க 1,800 கி.மீ பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரை சேர்ந்தவர் சோனியா தாஸ். இவர் தனது குடும்பம், 5 வயது குழந்தையை விட்டுவிட்டு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், பெண்களுக்கான விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால், வாடகை கொடுக்க முடியாமல் தவித்த அவர், விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நேரத்தில், புனேவில் வசிக்கும் அவரது தோழி சாபியா பனோ, தனது இல்லத்தில் சோனியா தாசுக்கு அவர் அடைக்கலம் கொடுத்தார். புனேவில் நாட்களை கழித்து கொண்டிருந்த நேரத்தில், தனது 5 வயது மகனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சோனியா தாசுக்கு உருவானது.



இதனால், தனது தோழில சாபியா உடன் புனேவில் இருந்து கிட்டத்தட்ட 1,800 கி.மீ தொலைவில் உள்ள ஜாம்ஷெட்பூர்-க்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர். ஜூலை 20ம் தேதி புறப்பட்ட அவர்கள், 24ம் தேதி ஜாம்ஷெட்பூர் சென்றனர். இது தொடர்பாக சோனியா கூறியதாவது: என்னிடம் பணம் இல்லை. வேலையும் இல்லை. அத்துடன் தங்குவதற்கு இடமும் இல்லை. எனவே புனேவில் உள்ள சாபியா பனோவின் வீட்டிற்கு சென்று விட்டேன். ஜார்கண்ட் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நான் டுவீட் செய்தேன். அத்துடன் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில அரசுகளின் உதவி எண்களை அழைத்தேன்.


ஜாம்ஷெட்பூர் சென்றதும், எனது மகன் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பான தொலைவில் இருந்து பார்த்தேன். அவர்கள் மாடியின் மேலே நின்று கொண்டிருந்தனர். நான் சாலையின் ஓரத்தில் நின்று அவர்களை பார்த்தேன். அதன்பின் நானும், எனது தோழியும் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டோம். எனக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு, மறுநாள் (ஜூலை 25ம் தேதி) எனது மகன் அங்கு அழைத்து வரப்பட்டார். நாங்கள் ஆண்கள் தோற்றத்தில் இருந்ததால் அது ஒருவகையில் பாதுகாப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,