ரூ.5 கோடி கடன் பெற்று செலுத்தாத 2,426 பேரின் பெயர்பட்டியல் வெளியீடு...
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவு: ரூ.5 கோடி கடன் பெற்று செலுத்தாத 2,426 பேரின் பெயர்பட்டியல் வெளியீடு....வாராக் கடன்களை வசூலிக்க வலியுறுத்தல்சென்னை: வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 1969ம் ஆண்டு ஜூலை 19 அன்று, நாட்டின் 16 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைந்த வரலாற்று நிகழ்வு நடந்து 51 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1955ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி என்று அறியப்படும் இன்டிரியல் வங்கி தான் முதலில் நாட்டுடைமையாக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, விவசாயிகள், சாதாரண மக்கள் பலன் பெற்றதை சுட்டிக்காட்டும் வங்கி ஊழியர் சம்மேளனம், வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
138 லட்சம் கோடி மக்கள் பணம் புழங்கக்கூடிய இந்த வங்கித்துறையை இன்றளவு இன்னும் சீராகவும், சிறப்பாகவும் நடத்த வேண்டும். ஆனால் இன்று இந்த வங்கிகளில் மிகப்பெரிய முதலாளிகள் கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். 5 கோடி ரூபாய் கடன் பெற்று செலுத்தாத 2 ஆயிரத்து 426 பேரின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடன் பெறுவோர்கள் கடனை திருப்பி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக அரசு கடனை தள்ளுபடி செய்கிறது. இதனால் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது.
|
Comments