தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள் வங்கிகளை 5 ஆக குறைப்பு

 

தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள்; வங்கிகளை 5 ஆக குறைக்க அரசு திட்டம்?


ஜூலை 21, 2020


புதுடில்லி: இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, சில வங்கிகளின் பங்குகளை தனியார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வாராக் கடன் பிரச்னைகளாலும் போதிய மூலதனம் இல்லாமலும் வங்கிகள் தவித்து வருகின்றன. இதனால் வங்கித்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் நலிந்த பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்கப்பட்டன. இது கடந்த ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.



இந்நிலையில், தற்போதைய நிலையில் 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கிகளில் பாதி அளவு தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூசிஓ பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய வங்கிகளின் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.


 


இது குறித்து பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி, ‛இனிமேல் வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதால், வங்கிகளின் பங்குகளை விற்க உள்ளதாகவும், நான்கு அல்லது ஐந்து பொதுத் துறை வங்கிகள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,' கூறினார்.

வங்கித் துறையில் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார்மயக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


    









 



 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,