லடாக் ஏரியில் ரோந்து செல்ல

லடாக் ஏரியில் ரோந்து செல்ல, சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு இந்தியா அனுப்புகிறது


 


லடாக் ஏரியில் ரோந்து செல்ல சீனா ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கப்பற்படை அதிக சக்தி வாய்ந்த படகுகளை எல்லைக்கு அனுப்புகிறது.


ஜூலை 01,  2020


புதுடெல்லி



லடாக்கின் கிழக்கே பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மீண்டும் இருதரப்பும் வன்முறையில் ஈடுபட்டன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் பலியானார்கள். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.


 


இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மோதலால் இருநாட்டு எல்லை முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.


 


 


இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த 16-ந்தேதி முதல் இருநாட்டு ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


 


இதன் தொடர்ச்சியாக இருநாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் கடந்த 22-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


 


அதன்படி எல்லையில் படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன.


 


கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் இதை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதனால் இருநாட்டு மோதல் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.


 


இந்த நிலையில் லடாக் மோதல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை  நடைபெற்றது. 


 


ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் இந்திய ராணுவத்தை தூண்டிவிடுவதில் சீன ராணுவம் குறியாக உள்ளது. மேலும் அதிகமான நிலப்பரப்பைக் ஆக்கிரமிக்கவும் எல்லையில் விரிவாக்கத்தை அதிகரிக்கவும் முயற்சிக்கிறது.


 


இந்த நிலையில் இந்திய கடற்படை ஒரு டஜன் உயர் ஆற்றல் கொண்ட,  கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்ட எஃகு படகுகளை லடாக்கிற்கு அனுப்புகிறது, இதனால் இந்திய இராணுவம் பங்கோங் சோ ஏரியில் ரோந்து செல்லவும், சீன இராணுவ ஏரி கடற்படையின் கனமான வகை 928 பி கப்பல்களுக்கு போட்டியாக செயல்படவும் முடியும். கிழக்கு லடாக்கில்  பங்கோங் சோ  ஏரி பகுதி சீனா ராணுவத்தின் 


ஆக்கிரமிப்பில் உள்ளது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி