சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்;
சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்; 600 கி.மீ. தூரத்தை 5 நாளில் கடந்தார்
நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெய்வநாயகப்பேரியைச் சேர்ந்தவர் பாண்டியன்(73). அந்த காலத்தில் பியூசி வரை படித்த இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது சென்னையில் கொராேனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாண்டியன் சென்னையில் இருந்து சைக்கிளில் தெய்வநாயகப்பேரிக்கு வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் 25ம்தேதி சைக்கிளில் சென்னையிலிருந்து ஊருக்கு புறப்பட்டேன். 5 நாட்கள் பயணித்தேன். பகலில் மட்டும் பயணம் மேற்கொள்வேன். இரவில் சாலையோரத்தில் ஓய்வெடுத்து, வழியில் உணவகங்களில் கிடைத்த உணவை உண்டேன். வரும் வழியில் யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. எந்த சோதனைச் சாவடியிலும் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. கடந்த 29ம்தேதி தெய்வநாயகப்பேரியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு வந்தேன்.
Comments