தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 78% நிறுவனங்கள் மூடல்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால்


78% நிறுவனங்கள் மூடல்



மதுரை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24 முதல் அடுத்தடுத்து அமலான ஊரடங்கால் 78 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டு 79 சதவீத சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'டான்சியா' (தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சங்கம்) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கால தொழில் பாதிப்பு குறித்து 1200க்கும் மேற்பட்ட உற்பத்தி, சேவை, விற்பனை சார்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் டான்சியா உடன் இணைந்து மடீட்சியா, கொடிசியா, அனைத்து மாவட்ட சிறு தொழில் சங்கங்கள் நடத்திய ஆய்வு குறித்து டான்சியா தலைவர் அன்புராஜன் கூறியதாவது: ஊரடங்கில் 78 நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் 79 சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருட்களை வாங்குவோர் பாக்கி தொகையை தாமதமாக தருவதால் 41.38 சதவீத தொழில்கள் முடங்கியது.


 






சரக்கு போக்குவரத்து இல்லாததால் 27 சதவீத நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன. 38 சதவீத நிறுவனங்களுக்கு ஒப்புக்கொண்ட ஆர்டர்களை பெறுவதும், கடன்களை நீடிப்பதும் சவாலாக உள்ளன. பாதிப்பு சரியாக 3 மாதங்களாகும் என 14 சதவீதம், 6 மாதங்களாகும் என 12 சதவீத நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. ஊரடங்கு வருவாய் இழப்பு 50 முதல் 80 சதவீதமாக உள்ளது. இடுபொருள், மின் கட்டண பாக்கி தொகை செலுத்துவதில் சிக்கல் என மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 68 சதவீத நிறுவனத்தினர் தம்மிடமுள்ள நிதியில் ஒரு மாதம் கூட தாக்கு முடியாது என கூறுகிறார்கள்.


 


நிதிமூலதன கடன் எளிமை


 


ஊரடங்கிற்கு பின் சிறு, குறு நிறுவனங்கள் நிதி வசதி பெறும் வழிமுறைகளை எளிதாக்கி கடன் வட்டி விகிதம் குறைக்க வேண்டும். கடன் தவணை, வட்டி செலுத்த 6 மாதங்கள், அசல் தொகை செலுத்த ஓராண்டு அவகாசம் வேண்டும். ஜி.எஸ்.டி., நிலுவை தொகைகளை விடுவிக்க வேண்டும். ஆண்டுக்கு 4 முதல் 8 சதவீதம் கடன் வட்டி விகிதம் திருப்பி செலுத்தும் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.


செலவினங்கள் குறைப்பு



நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை வழங்கி,சொத்து வரி விலக்கு அல்லது வரிவசூல் தள்ளி வைக்க வேண்டும். பெண்கள், புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கு தற்காலிக வருவாய், பணப்பயன் வழங்க வேண்டும். நிறுவனங்கள் குறைந்த தொழிலாளர்களுடன் இயங்க அனுமதித்து சிறப்பு நிதி உருவாக்க வேண்டும். வர்த்தக கடன் திட்டம், காப்பீடு திட்டங்கள் ஏற்படுத்த வேண்டும். டிஜிட்டல் இந்தியா மூலம் தொழில்நுட்ப மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். அரசு மேற்கண்ட வரைவு கொள்கைகளை செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும், என்றார்.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி