சுவாச சுத்திகரிப்பு வால்வுள்ள என் - 95 ரக முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம்
சுவாச சுத்திகரிப்பு வால்வுள்ள என் - 95 ரக முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம்': அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரத்துறை அவசர சுற்றறிக்கை
டெல்லி: கொரோனா தொற்று பரவலில் இருந்து காத்துக்கொள்ள வேண்டுமானால் என் - 95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த சுற்றறிக்கையை அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத் துறையின் பொது சுகாதார சேவை இயக்குனரகம் அனுப்பி வைத்துள்ளது. அதில் சுவாச சுத்திகரிப்பு வால்வுகள் வைத்து தைக்கப்பட்டுள்ள என் - 95 ரக முகக்கவசங்களை பொது மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மருத்துவத் துறை சார்ந்தவர்களின் தயாரிப்பை போல் அல்லாமல் பொதுமக்களால் குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் என் - 95 முகக்கவசங்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என் - 95 முகக்கவசங்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட எவ்வகை பருத்தி துணியிலும் முகக்கவசம் தைத்து பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, துணியால் தயாரிக்கப்படும் முகக் கவசங்களை நாள்தோறும் வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து துவைக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறையின் பொது சுகாதார சேவை இயக்குனரகம் வலியறுத்தியுள்ளது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனி முகக்கவசங்களை பயன்படுத்துமாறும், அவற்றை பயன்படுத்தும் போது வாய் மற்றும் மூக்கை இடைவெளியின்றி மறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments