மனிதர்களுக்குதான் ஊரடங்கு எங்களுக்கு இல்லை
மனிதர்களுக்குதான் ஊரடங்கு
எங்களுக்கு இல்லை என்கின்றன
காட்டு யானைகள்
தற்போது ஊரடங்கு என்பதால் மனிதர்கள் கூட நடைபயணம், மெந்நடை பயிற்சி மேற்கொள்ள இயலவில்லை. ஆனால் மேலே உள்ள படத்தை பாரத்ததும் என்ன தோன்றுகிறது? இரயில் வண்டிகள் இயக்கப்படாததால் தண்டவாளத்தில் யானைகள் பயணித்து வருகின்றனவா?
எங்கே இது நடைபெற்றது? உண்மை நிலவரம் என்ன? தொடர்ந்து படியுங்கள்.
நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் – உதகை இரயில் பாதை, முதுமலைக் காடுகள், ஒட்டியுள்ள பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. அவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்கு மனிதர்கள் குடியிருக்கும் பகுதிக்கு வருகின்றன. அப்போது எதிர்பாராதவிதமாக மனிதர்களை தாக்குவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. வறட்சியான காலங்களில் வன விலங்குகளான யானைகள் சமவெளி பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப் பகுதிக்கு வருகின்றன.
அவ்வாறு வரக்கூடிய வன விலங்குகள் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதிக்குள் சுற்றித் திரியும். அவ்வப்போது சாலை மற்றும் தண்டவாளங்களில் வருகின்றன. மேலும் அங்குள்ள பலா உள்ளிட்ட பழங்களை உண்டு ஆனந்தமாய் உலா வருகின்றன.
Comments