நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயர் கொண்ட விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்😢.
இந்திய மண்ணிற்கு வங்காளம் ஈந்த மாணிக்கங்களில் மிக முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர் (ஜனவரி 12 1863 - ஜூலை 4 1902). சாதி, மத ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிராக கலகக் குரல் கொடுத்த சமூக சீர்திருந்தவாதிகளில் நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயர் கொண்ட விவேகானந்தர் முக்கியமானவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சு
வாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது
Comments