தருமபுரியில் முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஜூலை வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்று அரசு அறிவித்துள்ளது
இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 26/7/2020 தருமபுரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது பால் மற்றும் மருந்தகம் கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது இன்று 80 சதவீத பொதுமக்கள் மட்டுமே ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது அரசு அறிவிப்பை மதிக்காமல் சிலர் சாலையில் சுற்றி வருகின்றனர் இதில் சிலர் மாஸ்க் அணியாமல் வருகின்றனர். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையாக இன்று முடிவடைகிறது மேலும் ஊரடங்கு நீடிக்கிறதா ?இல்லையா ? என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடை பெற்ற பின்னரே தெரியவரும்.
செய்தியாளர். கணபதி தருமபுரி
Comments