செவ்வாய் கிரகம் அழைக்கிறது
செவ்வாய் கிரகத்தில் பெயர்
ஒரு கோடி பேர் முன்பதிவு
திருப்பூர்: செவ்வாய் கிரகத்துக்கு, 'நாசா' அனுப்பும் விண்கலத்தில் தங்கள் பெயர்களை பொறிக்க, ஒரு கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'நாசா' செவ்வாய் கிரகத்துக்கு, புதிய விண்கலத்தை 2026ம் ஆண்டு அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் இந்த விண்கலத்தில் தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை, 'நாசா' வழங்கியுள்ளது.
இதுவரை, உலகம் முழுவதும், ஒரு கோடிக்கு மேற்பட்டோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.விண்ணப்பிப்போருக்கு, அவரவர் பெயர்களுடன் கூடிய விமான பயணச்சீட்டையும் பரிசளிக்கிறது. விரும்புவோர், https://mars.nasa.gov/participate/send-yourname/mars2020/ என்ற இணையதளம் மூலம், பெயர்களை பதியலாம்.
Comments