முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாத் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாத் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாத் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 10 தினங்களாக முத்துப்பேட்டை நகர் பகுதியில் 10,000 பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் முத்துப்பேட்டை அனைத்து ஜமாத் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முகமது அலி அவர்களும் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டு கப சுர குடிநீரை வழங்கினர். மேலும் முத்துப்பேட்டை அடுத்துள்ள கிராம பகுதிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர். பாலா. படங்கள். மு அமிர்தலிங்கம்
Comments