பல சாதனைகளைப் புரிந்த பனகல் அரசர்

பனகல் அரசர் பிறந்த நாள் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி நடைபெற்ற்றுக்கொண்டிருந்த சமயத்தில்,அப்போதைய முதலமைச்சர் சுப்பராயலு உடல்நிலை காரணமாக பதவி விலகினார். இதையடுத்து ஏப்ரல் 11, 1921 அன்று முதல்வராக பதவியேற்றார் பனகல் அரசர். அப்போது மருத்துவப் படிப்பு படிக்கவேண்டுமானால் சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இந்த நிலையில்தான், “மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை’ என்று உத்தரவிட்டார் முதல்வராக இருந்த பனகல் அரசர். இதற்கு செல்வாக்கு மிகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரிமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து சாதித்தார் பனகல் அரசர்.

இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரே மருத்துத்துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த நிலை மாறி, அனைத்து சமூகத்தவரும் மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டது.

இது மட்டுமல்ல… கோயில் சொத்துக்களை ஒருசிலரே அனுபவித்து வருவதைத் தடுக்கும் வகையில் கோயில்களுக்கென தனி துறையை உருவாக்கியதும் இவரே. இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார்

தொழில்துறையை ஊக்குவிக்கவும் சட்டத்தைக் கொண்டுவந்தார்: வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

தியாகராய நகரை உருவாக்கியவர் இவரே

அவரது நினைவாக உருவாக்கப்பட்டதுதான் தி.நகரில் உள்ள பனகல் பூங்கா.

அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கீழ் இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. மாகாண முதல்வர்களுக்கு குறைந்த அதிகாரம்தான் அளிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையிலும் பல பல சாதனைகளைப் புரிந்தார் பனகல் அரசர். அவருக்கு இன்று பிறந்த தினம்.நன்றியுடன் நினைவு கூர்வோம்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி