டான்ஸ் ஆடி வரவேற்ற தங்கை
கொரேனாவிலிருந்து மீண்ட அக்கா; டான்ஸ் ஆடி வரவேற்ற தங்கை: வைரல் வீடியோ
ஜூலை 20, 2020
புனே: கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய அக்காவுக்கு, குத்தாட்டம் போட்டு தங்கை வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலம் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு மும்பைக்கு அடுத்து புனே அதிக பாதிப்புள்ள நகராக உள்ளது. புனேவை சேர்ந்த சலோனி என்ற பெண்ணின் வீட்டில், அவரை தவிர அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தனது அக்கா குணமாகி வீடு திரும்ப, அவரை வரவேற்கும் விதமாக ரோட்டில் இறங்கி தங்கை குத்தாட்டம் போட்டு ஆடி, பாடி வரவேற்றுள்ளார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் அவர் பதிவிட அது வைரலானது.
Comments