ஆய்வுக்குள்ளாகும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு

கேன்சர் போல் பரவும் "டூப் போலீஸின்" பணிகள் என்ன?.. ஆய்வுக்குள்ளாகும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு


5-7-2020


சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புகளின் பணிகள் என்ன என்பது குறித்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரம் தற்போது இந்தியாவில் தணியாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இருவர் இறந்த சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த 6 பேருக்கு தொடர்பிருக் கலாம் என சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இந்த 6 பேரும் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐகளுக்கு அன்றாட பணிகளில் உதவி புரிந்து வந்தது தெரியவந்தது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை சித்ரவதை செய்ததில் இந்த 6 பேருக்கும் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக் கிறார்கள்.


அது மட்டுமல்லாமல் அந்த காவல் நிலையத்தில் இதற்கு முன் நடந்த கொடூரங்களுக்கும் இவர்கள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் யார் என கண்டுபிடித்த அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர். விசாரணை இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத விசாரணை அதிகாரி கூறுகையில் இதுவரை இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள், இரு காவலர்கள் என 5 பேரை கைது செய்துள்ளோம். இவர்களிடம் நடந்த விசாரணையில் ஒருவர் கூறுகையில் மற்றவர்களை எப்படி அடிப்போமே அதுபோல்தான் தந்தை, மகனை அடித்தோம் என்றார். ஆனால் நாங்கள் விசாரிப்பது என்னவெனில் இரவு முழுவதும் மணிக் கணக்கில் அவர்களை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?  அதிகாரம், அந்த குற்றத்தின் தன்மை என்ன, இதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் ஈடுபட்டது எப்படி?  ஆகியவைதான் என்றார் அந்த அதிகாரி.


தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்டத்தை கையில் எடுக்க இந்த அமைப்பினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த அமைப்பின் முக்கிய பணிகள் என்ன? கேன்சர் இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சிறிய நகரங்கள், ஊரக பகுதிகளில் அவை தவறாக பயன்படுத்தப்படுவதால் அதை கலைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.


இந்த கோரிக்கைகளுக்கு மத்தியில் ஒரு ஐஜி அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் போலீஸ் துறையில் கேன்சர் போல் பரவி வளர்ந்து வருகிறார்கள். ஊரக பகுதிகள் சிறிய நகரங்கள், ஊரக பகுதிகளில் இந்த அமைப்பினரை டீ, காபி வாங்கவும் உணவு வாங்கவும், வாகன தணிக்கை மேற்கொள்ளவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும், சட்டத்திற்கு விரோதமாக நபர்களை கஸ்டடிக்கு அழைத்து செல்லவும் இந்த அமைப்பினர் பயன்படுத்தப்படுகிறார்கள். அதிலும் தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் போலீஸ் அமைப்பானது சாதி மற்றும் மத அடையாளங் களை கொண்ட அதிகாரிகளிடமிருந்து சவால்களை எதிர்கொள்கிறது. இதனால் அவர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை நம்பியுள்ளார்கள் என்றார்.


தவறு கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையின் அறிக்கையில் பிரண்ட்ஸ் ஆப் அமைப்பை எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பும் ஆய்வு செய்யப்படுவதில்லை. இவர்களின் பணிகள் துறைக்கு இரட்டிப்பாக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணையும் சிலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன.  எனவே இந்த அமைப்பு குடிமக்கள் தன்னார்வலர்கள் திட்டம் என மாற்றப்பட வேண்டும். காவல் துறையின் முயற்சிகள் பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மட்டுமல்லாது அனைத்து குடிமக்களும் காவல்துறையின் நண்பர்கள் என பரிந்துரைத்தது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே சந்துரு கூறுகையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்து தமிழ்நாடு காவல் துறை பரிந்துரைத்த அறிக்கையை அமல்படுத்துவதற்கு இதுவே உரிய நேரம் என்றார். சாத்தாங்குளம்  


சாத்தான்குளம் சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி லூர்துசாமி கூறுகையில் சாத்தான்குளம் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அல்ல. அவர்கள் கொரோனா தொடர்பான பணிக்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள். இந்த சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் அமைப்பு என குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை எந்த பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளவில்லை. அவர்களிடம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பதற்கான எந்த அடையாள அட்டைகளும் இல்லை என்றார்,


 


எது எப்படியிருந்தாலும் சில காவல் நிலையங்களில் காவலர்களுக்கு கையூட்டு பெற இவர்கள் முகவர்கள் போல் பயன்படுத்தப்பட்டனர் என்ற புகாரும் எழுந்துள்ளது.   காவல் துறை தலைமைதான் இதையெல்லாம் கவனிக்க வேண்டும். 



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி