காமராஜர் கல்வி வளர்ச்சி நாளை வீட்டிலேயே கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள்
ஊரடங்கை முன்னிட்டு காமராஜர் கல்வி வளர்ச்சி நாளை வீட்டிலேயே கொண்டாடிய பள்ளி மாணவர்கள்


தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்   முன்னிட்டு வீட்டிலேயே காமராஜர் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடினார்கள்.



                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள்   நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு  உதவுவது ஆகும் . ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில்   பங்கேற்ற மாணவர்கள் ராகேஷ்,ராஜேஸ்வரி,ஜோயல்,சண்முகம்,புகழேந்தி,யோகேஸ்வரன்,
கீர்த்தியா,முகேஷ் அம்பானி,ஈஸ்வரன்,யோகேஸ்வரன்,திவ்யஸ்ரீ,பிரதிஷா ,முத்தய்யன்  ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இப்பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாட  வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும்  , சதுரங்க பயிற்சிகள்  நடைபெற்று வருவதும்  ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள்  தெரிவித்தனர்.



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காமராஜர் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம், கவிதை,பேச்சு போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு ஆன்லைன் மூலம் வீடியோக்களை அனுப்பினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,